» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செல்போன் தொலைந்ததால் வாலிபர் தற்கொலை: அரசு மருத்துவமனை ஊழியர்கள் அலைக்கழிப்பு!
வெள்ளி 6, ஜூன் 2025 8:41:25 PM (IST)
சாத்தான்குளம் அருகே செல்போன் தொலைந்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம், பேய்க்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்தவர் விக்டர் மகன் வினோத் (26). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு செல்போனை தொலைத்து விட்ட நிலையில், அவரது தந்தை புதிதாக செல்போன் வாங்கி கொடுத்துள்ளார்.அந்த செல்போனும் நேற்று தொலைந்து விட்டது. இதனால் மனமுடைந்த வினோத் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சாத்தான்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம்தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனை ஊழியர்கள் அலைக்கழிப்பு
இந்த நிலையில் மருத்துவமனையில் வினோத்குமார் உடலினை பிணவறையில் வைக்க குளிர்சாதன வசதி இல்லாத காரணத்தினால், அவரது குடும்பத்தினரிடம் குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு எடுத்து வந்து பிணவறையில் வைக்கும்படி மருத்துவமனை ஊழியர்கள் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
உடனடியாக அவர்கள் சாத்தான்குளத்திற்கு சென்று குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு எடுத்து பிணவறையில் வைத்தனர். ஆனாலும் மருத்துவமனை ஊழியர்கள் பிணவறையில் மின்சாரம் வேலை செய்யவில்லை மின் வயர் வாங்கி வரும்படி கூறினார்கள். எனினும் உறவினர்களும் மீண்டும் சாத்தான்குளத்திற்கு சென்று மின் வயர் வாங்கி வந்தனர். அதன் பிறகும் பிணவறையில் குளிர்சாதன பெட்டிக்குள் வினோத்குமாரின் உடலை வைக்க ஊழியர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது மருத்துவமனையில் இருந்து மின்சாரம் வழங்கினால் மின்கட்டணம் உயர்ந்து விடும் அதனால் பிணவறைக்கு மின்சாரம் வழங்கக்கூடாது என டாக்டர் ஒருவர் தெரிவித்ததாக உறவினர்கள் புகார் கூறினார்கள்.
இந்த சம்பவங்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மனிதாபிமானத்தோடு செயல்பட்டு சாத்தான்குளம் காவலர் குடியிருப்பில் இருந்து மின்சாரம் வழங்கி குளிர்சாதன பெட்டியில் வாலிபரின் உடலை வைத்தனர். இந்த சம்பவத்தால் வாலிபரின் உறவினர்கள் கடும் வேதனைக்கு ஆளானார்கள். அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)


