» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நீர்பிடிப்பு பகுதியில் உள்ள டவர்களை அகற்ற கோரிக்கை: 100 அடி டவரில் ஏறி வாலிபர் போராட்டம்!
வியாழன் 19, ஜூன் 2025 10:37:54 AM (IST)

கயத்தாறு அருகே நீர்பிடிப்பு பகுதியில் உள்ள டவர்களை அகற்ற வலியுறுத்தி 100 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வெள்ளாளங்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சூரியமினிக்கன் கிராமத்தில் பஞ்சாயத்து யூனியனுக்கு சொந்தமான குளத்தின் அருகில் தனியார் சோலார் நிறுவனத்தின் மூலம் 6 டவர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நீர் பிடிப்பு பகுதியில் உள்ளதால் இந்த டவர்களை அகற்ற வேண்டும் என்று சூரியமினிக்கன் கிராமத்தைச் சேர்ந்த வேல்முத்து மகன் சரவணன் (27) என்பவர் கயத்தார் யூனியன், பேரூராட்சி அதிகாரிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோருக்கு மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் டவர்களை அகற்ற வலியுறுத்தி அவர் இன்று அதிகாலையில் 5 மணியளவில் 100 அடி உயர டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த கயத்தாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதா தேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி, கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சுந்தர்ராஜ் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், அங்கு கூடிய கிராம மக்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.பின்னர் கழுகுமலை தீயணைப்பு துறையினர் சரவணனை கீழே இறக்கினர்.108 ஆம்புலன்ஸில் முதல் சிகிச்சைக்காக கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவகங்கை வழக்கில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!
செவ்வாய் 1, ஜூலை 2025 7:46:56 PM (IST)

அஜித்குமார் விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
செவ்வாய் 1, ஜூலை 2025 5:03:28 PM (IST)

வெற்றி நிச்சயம் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 1, ஜூலை 2025 4:58:05 PM (IST)

அஜித்குமாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டது யார்? டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 1, ஜூலை 2025 4:02:21 PM (IST)

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: மானாமதுரை டி.எஸ்.பி. சஸ்பெண்ட்!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:43:56 PM (IST)

அஜித்குமாரை பிரம்பால் கொடூரமாக தாக்கும் போலீசார் : அதிர்ச்சி வீடியோ வெளியானது!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:23:07 PM (IST)
