» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணி பொறுப்பாளர்கள் நியமனம்: விஜய் அறிவிப்பு

வியாழன் 19, ஜூன் 2025 12:53:57 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகம் வருகிற சட்டசபை தேர்தலை நோக்கி பணியாற்றி வருகிறது. அந்த வகையில், கட்சியின் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தப்பட்டு வருகிறது. கட்சியில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

மாநில மருத்துவர் அணி நிர்வாகிகள்: சரவணன் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளர்களாக விஷ்ணு, ரவி, அருண் பிரசாத், நரேஷ், அரவிந்த், பிரிதீங்கா, கார்த்திக், சித்தர் பாண்டியன், மணிமேகலை, ஹரி, ஜெகதா, சினோரா P.S. மோஹித், தமிழினியன், விவேக் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கழக மருத்துவர் அணியின் புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படி, கழகப் பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழகப் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory