» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது தீவிபத்து : வைக்கோல் படப்பு எரிந்து சேதம்

திங்கள் 7, ஜூலை 2025 3:12:12 PM (IST)



தூத்துக்குடியில் இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது தீவிபத்து ஏற்பட்டு வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்தது.
 
தூத்துக்குடி வடக்கு சங்கரப்பேரியில் கோசண்டு மகன்  செல்லத்தேவர் என்பவர் இறந்த வீட்டில் அடக்கத்திற்காக இறுதி ஊர்வலம் செல்லும் போது பட்டாசு வெடித்ததில் தீப்பொறி காற்றில் பறந்து அருகில் இருந்த அங்குசாமி என்பவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறை அலுவலகத்தில் இருந்து வந்த தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதனால் வைக்கோல் படப்பு தவிர வேறெந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory