» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆசிரியர்கள் தக்க பாடத்தை கற்பிப்பார்கள்: நயினார் நாகேந்திரன்
புதன் 9, ஜூலை 2025 5:07:26 PM (IST)
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடத்தை தமிழக ஆசிரியர்கள் கற்பிப்பார்கள் என்பது உறுதி! என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

திமுக-வின் ஆட்சியில் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்குக்கூட அரசு ஊழியர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் தெருவில் இறங்கிப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தான் நிதர்சனம். இந்நிலையில், நியாயமாக கிடைக்க வேண்டிய பணிநிரந்தரத்தைக் கேட்டு போராட முயன்ற ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்?
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தாங்கள் எதிர்கட்சியாக இருக்கும் போது போராட்டத்திற்கு ஆதரவளித்ததும், ஆட்சி கட்டிலில் ஏறுவதற்காக தேர்தல் வாக்குறுதி எண் 181 கீழ் பணிநிரந்தரம் செய்யப்படும் என உறுதியளித்ததும், நான்காண்டு கால ஆட்சியில் மறந்துவிட்டதா? அல்லது கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு ஆசிரியர்கள் நலனை அலட்சியப் படுத்துவதுதான் திராவிட மாடலா?
அராஜகப் போக்குடன் வழக்கு பதிந்து அரசு ஊழியர்களை அவமதித்து அலைக்கழிக்கும் இந்த திமுகவின் ஆணவமே அதன் அழிவுக்கு அடித்தளமிடும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடத்தை தமிழக ஆசிரியர்கள் கற்பிப்பார்கள் என்பது உறுதி! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

அனுமதி மீறி போராட்டம் நடத்துவது அரசியல் கட்சிக்கு அழகல்ல: உயர்நீதிமன்றம் கண்டனம்!
புதன் 9, ஜூலை 2025 5:38:20 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து : 13 பேருக்கு ரயில்வே விசாரணை குழு சம்மன்
புதன் 9, ஜூலை 2025 4:19:04 PM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடப் பணிகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
புதன் 9, ஜூலை 2025 4:08:01 PM (IST)

கேரளாவில் பஸ்கள் ஓடவில்லை: கோவையில் இருந்து புறப்பட்ட 50 பஸ்கள் எல்லையில் நிறுத்தம்!
புதன் 9, ஜூலை 2025 11:36:56 AM (IST)
