» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப் 4 தேர்வு வினாத்தாள் எதுவும் கசியவில்லை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் பேட்டி

சனி 12, ஜூலை 2025 4:41:25 PM (IST)

குரூப் 4 தேர்வு வினாத்தாள் எதுவும் கசியவில்லை. தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் கூறினார். 

தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.அந்தவகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற குரூப்-4 பணிகளில் 3,935 காலி இடங்கள் இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.

இந்த இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு சமீபத்தில் ஹால்டிக்கெட்டையும் வெளியிட்டது.அதன்படி, 5,26,553 ஆண்கள், 8,63,068 பெண்கள், 117 திருநங்கைகள் என மொத்தம் 13,89,738 பேர் இன்று (சனிக்கிழமை) இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 314 மையங்களில் எழுதுகிறார்கள். இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும். வரும் நாட்களில் 10,000 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வு வினாத்தாள் எதுவும் கசியவில்லை. குரூப் 4 தேர்வு வினாத்தாள், விடைத்தாள் அனைத்து பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. என தெரிவித்தார் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory