» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

திங்கள் 14, ஜூலை 2025 10:22:21 AM (IST)



தமிழகத்தில்  டிஎஸ்பி, உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

நிர்வாக காரணங்களுக்காக காவல்துறையில் அவ்வப்போது பணியிட மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில், காவல் அதிகாரிகள் சிலரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகரக் காவல்துறையின் எம்கேபி நகர் சரக காவல்துறை உதவி ஆணையராக உள்ள மணிவண்ணன் மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல,மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராகவுள்ள காவ்யா, மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

மேலும், கோவை சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன், சேலம் காவல் உதவி ஆணையர் செல்வம், தீவிரவாத தடுப்புப் பிரிவு டிஎஸ்பி பண்டாரசாமி, சென்னை திருமங்கலம் உதவி ஆணையர் பிரம்மானந்தன் உள்ளிட்டோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory