» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு பந்தல்கால் நடும் விழா: தொண்டர்கள் குவிந்தனர்!

புதன் 16, ஜூலை 2025 11:55:08 AM (IST)



மதுரையில் தவெக 2-வது மாநில மாநாட்டை முன்னிட்டு இன்று பந்தல்கால் நடும் விழா சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கி இரண்டு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி அக்கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி என்னும் இடத்தில் ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், இரண்டாவது மாநில மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழா இன்று காலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் நடந்துள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடலை அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குச் சென்று மாநாட்டுக்கான அனுமதி மனுவை கட்சியின் பொதுச்செயலாளர் வழங்கினார். இதனையொட்டி மதுரை எஸ்பி அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory