» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி: ஆட்சியர் துவக்கி வைத்தார்

திங்கள் 8, செப்டம்பர் 2025 11:22:35 AM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை கபடி விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை கபடி விளையாட்டுப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இராஜக்கமங்கலம் உள் விளையாட்டு அரங்கத்தில்  தெரிவிக்கையில்- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் 2025-2026ஆம் ஆண்டிற்கான கன்னியாகுமரி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 26.08.2025 முதல் 12.09.2025 வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் இப்போட்டிகளின் முக்கிய நோக்கம் அனைவருடைய விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டு வருவதேயாகும்.

அதன் ஒருபகுதியாக இன்றையதினம் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை கபடி விளையாட்டுப்போட்டிகளை இராஜக்கமங்கலம் உள் விளையாட்டு அரங்கத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பேசினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் வினு, விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory