» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய முதல்வருக்கு அமைச்சர் வரவேற்பு!

திங்கள் 8, செப்டம்பர் 2025 11:39:11 AM (IST)



ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் கீதாஜீவன் வரவேற்றார். 

'தமிழ்நாடு வளர்கிறது' (டி.என்.ரைசிங்) என்ற பயணத்தின் கீழ் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ந்தேதி சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு அவர், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். மேலும் அவர் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, ஜெர்மனியை சேர்ந்த நிறுவனங்களுடன் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரத்து 20 கோடி முதலீடுகளை ஈர்த்தார்.

பின்னர் ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 2-ந்தேதி இங்கிலாந்து சென்றார். லண்டனில் முதலீட்டாளர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது 7 நிறுவனங்களுடன் ரூ.8 ஆயிரத்து 496 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின்போது தமிழ்நாட்டுக்கு மொத்தம் ரூ.15 ஆயிரத்து 516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்பினார். காலை 8.45 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். அவருக்கு கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கீதாஜீவன், துரைமுருகன், மற்றும் திமுக நிர்வாகிகள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதுகுறித்து அமைச்சர் கீதாஜீவன வெளியிட்ட பதிவில், "ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்று உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றியதுடன், தமிழ்நாட்டிற்கு 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 15,516 கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்து வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை விமான நிலைய அண்ணா பன்னாட்டு முனையத்தில் வரவேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

முட்டால்Sep 9, 2025 - 07:17:43 AM | Posted IP 172.7*****

அது என்ன முதலீடு? குடும்பத்துக்காக வா? மக்களுக்காக வா? ஒண்ணுமே புரியல ..17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அது யாருக்கு கிடைத்துவிட்டது, வடை நாட்டுக்காரனுக்கா ?? தந்தை பெரியாரை வைத்து தூக்கிட்டு சுற்றி வந்ததும், அதுல பாராட்டாம் . போங்கடா சிரிப்பு காட்டிகிட்டு ..

பிரபுSep 8, 2025 - 02:20:43 PM | Posted IP 172.7*****

தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் நல்லாட்சி நாயகர் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தூத்துக்குடி மக்களை காத்த மகராசி திருமதி பெ.கீதாஜீவன் அவர்கள்

என்னது ?Sep 8, 2025 - 12:46:17 PM | Posted IP 172.7*****

டிரம்ப் அ சந்திச்சு வந்தாரா ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory