» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் செப்.11ஆம் தேதி சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழுவினர் ஆய்வு!

செவ்வாய் 9, செப்டம்பர் 2025 5:21:05 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற 11ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை அரசு உறுதிமொழிக்குழுவினர் (2024-2026) அதன் தலைவர் த.வேல்முருகன் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 11.09.2025 (வியாழக்கிழமை) அன்று வருகை தரவுள்ளார்கள். 

தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் த.வேல்முருகன் (பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்) தலைமையில் உறுப்பினர்கள் ச.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்), இரா.அருள் (சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), மு.சக்ரபாணி (வானூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), கோ.தளபதி (மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), A.நல்லதம்பி (திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), ரா.மணி (ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), சா.மாங்குடி (காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), M.K.மோகன் (அண்ணாநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), உறுதிமொழிக்குழு செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் உள்ளிட்டவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்கள். 

மேலும் 11.09.2025 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார் எ்ன்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory