» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி கண்ணாடி பாலத்தில் தளவாய்சுந்தரம் ஆய்வு : மக்களின் அச்சத்தை போக்க வலியுறுத்தல்!

புதன் 10, செப்டம்பர் 2025 10:57:27 AM (IST)



கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தின் கண்ணாடி கீறல் விழுந்ததை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ தளவாய்சுந்தரம் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடிக் கூண்டு பாலம் பராமரிப்பு பணியின் போது சுத்தியல் விழுந்து கண்ணாடி சேதமடைந்ததை தொடர்ந்து கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும் குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான.என்.தளவாய் சுந்தரம் கண்ணாடி கூண்டு பாலத்திற்கு படகில் கழக நிர்வாகிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் உடனடியாக சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட அச்சத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அதே போன்று மாதம் மாதம் கண்ணாடி கூண்டு பாலத்திற்கான மாதம் ரூ.63 ஆயிரம் பராமரிப்பு செலவு தொகையை அதிகரிக்க வேண்டும், தமிழக அரசு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து பணிகளை தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் மேலும் தற்போது பாலத்தில் கீறல் விழுந்த கண்ணாடி,மாற்றப்பட்டு புதிய கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

உருட்டுSep 10, 2025 - 12:18:47 PM | Posted IP 172.7*****

அரசியல்வாதிகள் ஆய்வாம் ? அடுத்து கண்ணுமுழி வந்து ஆய்வு பண்ணிட்டு போவாங்களாம். படித்த என்ஜினீயர் வந்து பார்க்கமாட்டாங்களாம். போங்கடா ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory