» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம்: பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு!

வியாழன் 11, செப்டம்பர் 2025 8:44:26 PM (IST)



பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எல்லைப் பகுதியில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தினம் இன்று (11.09.2025) அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மாவட்ட எல்லை சோதனை சாவடிகள் உட்பட மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று சூரங்குடி மற்றும் கோடாங்கிபட்டி ஆகிய சோதனை சாவடிகளுக்கு நேரில் சென்றும், மாவட்டத்தின் முக்கிய இடங்களுக்கு ரோந்து மேற்கொண்டும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின் பணியை ஆய்வு செய்து காவல்துறையினருக்குஅறிவுரைகள் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தீபு உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory