» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போத்தீஸ் ஜவுளிக்கடைகளில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை

வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:19:45 PM (IST)

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் போத்தீஸ் ஜவுளிக்கடையில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை திநகரில் உள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 3 கார்களில் 12-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலையிலேயே குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் கூட குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ளன. இந்த நிலையில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாத சென்னை போத்தீஸ் ஜவுளி நிறுவன இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தி வருகிறது.

நீலாங்கரையில் உள்ள ரமேஷ் மகன்கள் அசோக், போத் ராஜா ஆகியோர் வீடுகளிலும் ஐடி சோதனை நடத்தப்படுகிறது. அது போல் குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ண மகால் மற்றும் துணிக் கடையிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனை காரணமாக பல இடங்களில் போத்தீஸ் கடைகள் மூடப்பட்டுள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory