» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருமண ஆசைகாட்டி ஏமாற்றிய அரசு ஊழியர் : விதவை பெண் விஷம் குடித்து தற்கொலை!

செவ்வாய் 16, செப்டம்பர் 2025 4:19:24 PM (IST)

குலசேகரம் அருகே திருமண ஆசைகாட்டி அரசு ஊழியர் ஏமாற்றியதால் விதவை பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே கூடை துாக்கியை சேர்ந்தவர் ரமணி 41. இவரது கணவர் இறந்துவிட்டார். 15 வயது மகள் உள்ளார். அவர், நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குலசேகரம் போலீசார் விசாரித்தனர்.

ரமணி தன் தந்தை ஜார்ஜுக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் கூறியிருப்பதாவது: அரசின் கருணை வேலை கேட்டு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தேன். அந்த பிரிவில் பணிபுரியும் ஊழியர், என்னிடம் அன்பாக பேசி திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டினார். இதை நம்பி, அவரிடம் நகை, பணம் கொடுத்தேன். அவர் என்னை ஏமாற்றி, வேறு பெண்ணை திருமணம் செய்தார். 

கேட்டபோது, அவரது உறவினர்கள் அவமானப்படுத்தினர். மனவேதனையில் தற்கொலை செய்கிறேன். அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். கடிதத்தின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட அரசு ஊழியரிடம் விசாரிக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory