» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆட்டோக்களில் அவசர உதவி கியூஆர் குறியீடு ஸ்டிக்கர்: போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்!

புதன் 24, செப்டம்பர் 2025 5:43:47 PM (IST)



ஆட்டோக்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 'அவசர உதவி எண்கள் கொண்ட QR குறியீடு ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பாக போக்குவரத்து காவல்துறையின் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில், தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில், பத்மநாபபுரம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் அசோக் தலைமையில் 24.09.2025 அன்று அழகியமண்டபம் பொன்அரசி திருமணமண்டபத்தில் வைத்து, பத்மனாபபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கூட்டம் நடைப்பெற்றது.

இதில் ஆட்டோக்களில் அவசர உதவி எண்கள் கொண்ட QR குறியீடு ஸ்டிக்கர் ஒட்டப்படவேண்டும், இந்த குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம், மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும் முடியும். ஆட்டோ ஓட்டுனர்கள் சீருடை அணிந்து, அதில் பெயர் அட்டை (பேட்ஜ்) அணிந்திருக்க வேண்டும். இது ஓட்டுனரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், பயணிகளின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் உதவுகிறது.

ஆட்டோ ஓட்டுனர், பணி நேரத்தில் மது அருந்தி வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றக்கூடாது. பள்ளி குழந்தைகளுக்கான ஸ்கூல் பேக்களை ஆட்டோவின் வெளியே தொங்க விடக்கூடாது, இதனால் விபத்து ஏற்படும் அபாயமுள்ளது.  சாலையில் மற்ற வாகனங்கள் விபத்தில் சிக்கினால், ஆட்டோ ஓட்டுனர்கள் உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு பணியில் இறங்க வேண்டும். 

இவ்வாறு மனிதநேய பணியில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுனர்களை பொதுமக்கள் மட்டுமின்றி காவல்துறையும் பாராட்டுகிறது என காவல்துறை சார்பில் அறிவுரை கூறப்பட்டது. இக்கூட்டத்தில், தக்கலை, அழகியமண்டபம், திருவிதாங்கோடு, பத்மனாபபுரம், குமாரக்கோவில், முளகுமூடு, மேக்காய்மண்டபம், வேர்கிளம்பி உட்பட பல பகுதிகளிலிருந்து 150 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory