» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளராக தொழிலதிபர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் பொறுப்பேற்பு!
வியாழன் 25, செப்டம்பர் 2025 8:34:24 AM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி. எஸ். ஐ. பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளராக தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல நிர்வாக கமிட்டி செயலர் தொழிலதிபர் நீகர் பிரின்ஸ் கிப்சன் பதவி ஏற்றார்.
தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் கே. ரூபன் மார்க் ஆணையின் படி, தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் பொறுப்பு பேராயராக ஆந்திரா ராயலசீமா திருமண்டல பேராயர் ஐசக் வரபிரசாத் புதிதாக நியமனம் செய்யப்பட்டார். மேலும் சினாடு பேரவை சார்பில் திருமண்டல நிர்வாகச் செயலராக நீகர் பிரின்ஸ் கிப்ட்சன மற்றும் புதிய நிர்வாகக் குழுவினர் நியமனம் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகக்குழு கூட்டத்தில் திருமண்டல மேல்நிலைப் பள்ளி மற்றும் சிறப்பு பள்ளிகளின் மேலாளராக பிரேம்குமார் ராஜாசிங், திருமண்டல துவக்கப் பள்ளிகளின் மேலாளராக குருவானவர் ஜாஸ்பர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும் திருமண்டல கல்லூரி தாளாளர்கள், பள்ளிகளின் தாளாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர்
இதில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளராக தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாக கமிட்டி செயலர் தொழிலதிபர் நீகர் பிரின்ஸ் கிப்சன் நியமனம் செய்யப்பட்டார். புதிய தாளாளர் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்றார்.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாக கமிட்டி உறுப்பினர் குருவானவர் இம்மானுவேல் வான்ஸ்டக் ஆரம்ப ஜெபம் செய்தார். தொடர்ந்து திருமண்டல நிர்வாகச் செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரியின் புதிய தாளாளராகப் பதவிப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சிறப்பு பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜசிங், சபை மன்ற தலைவர் வெல்டன், குருவானவர்கள் ஜெபதுரை, ஜெபஸ் நாசரேத் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் வயலா மார்க்கெட், லூக்கா நர்சிங் கல்லூரி தாளாளர் மருத்துவர் பாலச்சந்திரன், நிர்வாக கமிட்டி உறுப்பினர் எபநேசர், நாசரேத் மர்காஷிஸ் தேவதாஸ், ராஜாசிங், அகஸ்டின் மற்றும் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அம்மன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம் : திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 8:23:01 PM (IST)

கதர் அங்காடிகளில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:09:57 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர்... முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 4:21:24 PM (IST)

மத்திய அரசு நிதி விடுவிப்பு: ஆர்டிஇ திட்டத்தில் நடைமுறைகள் தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 2, அக்டோபர் 2025 4:06:42 PM (IST)

கடலில் மூழ்கி தந்தை, 2 மகள்கள் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:50:14 PM (IST)

கொள்கை எதிரி: விஜய் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன் கேள்வி!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:44:04 PM (IST)
