» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் உதவிபேராசிரியர் செல்வம் விஞ்ஞானி பட்டியலில் முதலிடம்!

வியாழன் 25, செப்டம்பர் 2025 10:17:27 AM (IST)



தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் உதவிபேராசிரியர் செல்வம் உலகின் 2% விஞ்ஞானி பட்டியலில் தமிழ்நாட்டில் நிலத்தியல்துறையில் முதலிடம் பெற்றுள்ளார்.

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் நிலத்தியல்துறையில் உதவிப்பேராசிரியராக பணியாற்றும் டாக்டர்செல்வம், அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் எல்ஸ்விர்பிவி இணைந்து வெளியிட்டுள்ள உலகின் முன்னணி 2% விஞ்ஞானிகள் பட்டியலில் மீண்டும்இடம்பெற்றுள்ளார். இது தொடர்ந்து ஐந்தாவதுமுறையாக 2021 2022, 2023, 2024, மற்றும் 2025 அவருக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

ஸ்டான்போர்ட் –எல்ஸ்விர்பட்டியல் உலகளவில் சுமார் 1,00,000 விஞ்ஞானிகளை கொண்டுள்ளது. இது 22 பரந்த அறிவியல் துறைகள் மற்றும் 176 துணைத்துறைகளை உள்ளடக்கியதாகும். ஆராய்ச்சிதரம், மேற்கோள்களின் எண்ணிக்கை போன்றபுள்ளி விவர அடிப்படையிலான அளவுகோல்கள் மூலம் தேர்வுசெய்யப்படுகிறது. டாக்டர்செல்வம், புவி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் 1,30,223 விஞ்ஞானிகளில் 1261வது இடத்தையும் (0.01%), இந்தியஅளவில் 68 வது இடத்தையும்பெற்றுள்ளார். 

மொத்தத்தில் உலகளவில் 2,36,313 விஞ்ஞானிகளில் 57,017-ஆவதுஇடம் (0.50%) வகிப்பதோடு, இந்தியஅளவில் 6,239 விஞ்ஞானிகளில் 965-வதுஇடம் (0.35%) பெற்றுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள நிலத்தியல்துறையில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக் கழக அளவில் அவரது ஆராய்ச்சிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இந்தச் சாதனை, வ.உ.சி கல்லூரிக்கும் நிலத்தியல்துறைக்கும் கல்லூரியில் நடைபெறும் உயர்தரமான ஆராய்ச்சிக்கும், அவர் காட்டும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

செல்வத்திற்கு 5,000-க்கும்மேற்பட்ட மேற்கோள்கள் மற்றும் பல்வேறுநாட்டில் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் முக்கியமாக மெக்சிகோவில் காலசூழ்நிலை பற்றிய ஆராய்ச்சியும், மேலும் இந்தியாவின் பல்வேறுபகுதிகளில் நிலத்தடிநீர் ஆராய்ச்சி மற்றும் மைக்ரோபிளாஸ்டிக் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகியவற்றைபற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். இந்த ஆராய்ச்சிகளால் வெளியிடப்பட்ட கட்டுரைகள் மூலம் இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்துள்ளது. 

இதுவரை செல்வம் 130-க்கும்மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளையும், ஐந்து புத்தகங்களையும், பல்வேறு பன்னாட்டு மற்றும் சர்வதேச கருத்தரங்குகளில் தனது ஆராய்ச்சி கட்டுரைகளை பதிவு செய்துள்ளார். மேலும் வ. உ. சி கல்லூரியில் பல்வேறு கருத்தரங்குகளை மத்திய மாநில அரசிடம் இருந்துநிதி பெற்று 20-க்கும் மேற்பட்ட பல்வேறு பன்னாட்டு மற்றும் சர்வதேச கருத்தரங்குகளை நடத்தியுள்ளார் இதுவரை 7 ஆராய்ச்சிதிட்டங்களை மத்திய மாநில அரசிடம் இருந்து நிதிஉதவிபெற்று இந்தகட்டுரைகளை சர்வதேச அளவில் பதிவிட்டுள்ளார்.

செல்வத்தை கல்லூரி செயலாளர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரபாகு இதயம் கனிந்த பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த சிறப்பான அங்கீகாரம், அவரது அறிவை மேம்படுத்தும் அர்ப்பணிப்பையும், நிலத்தியல் துறையில் அவர் செய்த சிறப்பான பங்களிப்புகளையும் வெளிப்படுத்துகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory