» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோவர்ஸ்: தமிழக அரசியல்வாதிகளில் விஜய் முதலிடம்!
வியாழன் 25, செப்டம்பர் 2025 10:33:04 AM (IST)
தமிழக அரசியல்வாதிகளில் சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோவர்ஸ் பெற்றிருப்பவர்களில் தவெக தலைவர் விஜய் முதல் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தமிழக அரசியல்வாதிகளில் முதலிடத்தில் "விஜய்” இடம்பிடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகள், நடிகர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் கணக்குகளை வைத்திருக்கின்றனர். அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையிலேயே, அவர்களுக்கான ரசிகர்கள் எவ்வளவு என்பதை கணிக்கலாம். அந்த வகையில், தமிழக அரசியல்வாதிகளில் அதிக பின்தொடர்பவர்களை பெற்றிருப்பவர்களில் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் முதல் இடம் பிடித்துள்ளார்.
விஜய்க்கு, ‘இன்ஸ்டாகிராமில்’ 1 கோடியே 46 லட்சம், ‘பேஸ்புக்’கில் 77 லட்சம், ‘எக்ஸ்’ தளத்தில் 55 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். ஒரே நபர் 3 தளங்களிலும் பின்தொடர்ந்து இருக்கக்கூடும். எனவே, மூன்றையும் சேர்த்து சராசரியாக பார்த்தால், சுமார் 93 லட்சம் பேர் விஜய்யை பின்தொடர்கிறார்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ‘இன்ஸ்டாகிராமில்’ 18 லட்சம், ‘பேஸ்புக்’கில் 31 லட்சம், ‘எக்ஸ்’ தளத்தில் 40 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 30 லட்சம் பேர் அவரை பின்தொடர்கிறார்கள்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, இன்ஸ்டாகிராமில் 63 ஆயிரம், ‘பேஸ்புக்’கில் 1.68 லட்சம், ‘எக்ஸ்’ தளத்தில் 6.55 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 2.95 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, ‘இன்ஸ்டாகிராமில்’ 15 லட்சம், ‘பேஸ்புக்’கில் 5.77 லட்சம், ‘எக்ஸ்’ தளத்தில் 10 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 10.25 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, ‘இன்ஸ்டாகிராமில்’ 98 ஆயிரம், ‘பேஸ்புக்’கில் 11 லட்சம், ‘எக்ஸ்’ தளத்தில் 37 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 16.25 லட்சம் பேர் அவரை பின்தொடர்கிறார்கள். தமிழக அரசியல்வாதிகளில் இந்த நான்கு பேருக்கே அதிக பின் தொடர்பவர்கள் உள்ளனர். மற்ற தலைவர்களுக்கு மிகக் குறைந்த அளவே இருக்கிறது.
விஜய்யை பொறுத்தவரை, அவர் ஏற்கனவே சினிமா பிரபலம் என்பதால், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரை பின்தொடர்கிறார்கள். இதனால், அவருக்கான பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இயற்கையாகவே அதிகமாக இருக்கிறது. அதேபோல் மற்ற கட்சியினர் கூட விஜயை ஒரு நடிகராக பின்தொடர்வார்கள். விஜய்க்கும் திரை உலக பிரபலம் என்பதால் அதிக பின்தொடர்பவர்கள் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது என்று சமூகவலைதள ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அம்மன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம் : திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 8:23:01 PM (IST)

கதர் அங்காடிகளில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:09:57 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர்... முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 4:21:24 PM (IST)

மத்திய அரசு நிதி விடுவிப்பு: ஆர்டிஇ திட்டத்தில் நடைமுறைகள் தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 2, அக்டோபர் 2025 4:06:42 PM (IST)

கடலில் மூழ்கி தந்தை, 2 மகள்கள் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:50:14 PM (IST)

கொள்கை எதிரி: விஜய் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன் கேள்வி!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:44:04 PM (IST)
