» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் பட்டா ரத்து உத்தரவை திரும்ப பெற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை!

வியாழன் 25, செப்டம்பர் 2025 3:25:01 PM (IST)



தூத்துக்குடியில் பட்டாக்களை ரத்து செய்து வட்டாட்சியருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாநகராட்சி 47வது வார்டுக்கு உட்பட்ட லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாக்களை ரத்து செய்து அதைச் சுற்றியுள்ள வீடுகளை அப்புறப்படுத்த குடியிருப்புகளுக்கு வழங்கியுள்ள பட்டாக்களை ரத்து செய்ய, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது..

மாநகராட்சியின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், வட்டாட்சியருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொது மக்கள் அளித்த புகாரின் பேரில், அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி முன்னாள் முதல்வர் எடப்பாடியார் கவனத்திற்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த நிகழ்வின் போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை துணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் நகர் மன்ற தலைவர் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ், மற்றும்நிர்வாகிகள் சகாயராஜ், சிறுபான்மை பிரிவு அசன், வட்ட செயலாளர் லயன்ஸ் டவுண் சகாயராஜ், போக்குவரத்து கழக நிர்வாகி பெலிக்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory