» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவனந்தபுரம் - மங்களுர் ரயில் கன்னியாகுமரி நீட்டிப்பு வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
வியாழன் 25, செப்டம்பர் 2025 3:34:12 PM (IST)
திருவனந்தபுரம் - மங்களுர் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பீகார் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ரயில்வேதுறை பீகார் மாநிலத்தை மையமாக வைத்து பல்வேறு வழித்தடங்களில் புதிய ரயில் சேவைகள் , ரயில்கள் நீட்டிப்பு அறிவிப்புகள் அறிவித்து இயங்கிவருகின்றது. தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கும் நாள் வரை இந்த புதிய ரயில்கள் அறிவிப்பு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இதைப்போல் தமிழ்நாடு மாநிலத்துக்கு அடுத்த வருட தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்த நிலையில் பீஹார் மாநிலத்தில் புதிய ரயில்கள் அறிவித்து இயக்கியதை போன்று தமிழ்நாட்டில் அறிவித்து இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கன்னியாகுமரி மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக சுற்றுலா தளம் ஆகும். கன்னியாகுமரியில் கடலில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்ட பிறகு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குறிப்பாக கோவா, மங்களூர், கேரளாவிலிருந்து வருகை தருகிறார்கள். கர்நாடக அரசு ஆன்மீக சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி கர்நாடகாவில் கடற்கரை மாவட்ட பகுதிகளில் இருந்து அதாவது உடுப்பி, மங்களூர், etc.. கன்னியாகுமரியிலிருந்து சுற்றுலா திட்டத்தை நிதி உதவியுடன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமில்லாமல் மாவட்டத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வேலை, கல்வி மற்றும் புனித யாத்திரைக்காக கேரளாவிற்கு பயணிக்கின்றனர். குறிப்பாக, மலையாளம் பேசும் மக்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் கோழிக்கோடு, மலப்புரம் போன்ற வட கேரள பகுதிகளுக்கு அதிகம் செல்கின்றனர். மேலும், கேரளாவிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் வார இறுதியில் வீடு திரும்புவதற்கு நேரடி இரவு நேர ரயில் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலை தரிசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி, கும்பசேரி, தர்மஸ்தலா, கோகர்னா போன்ற புனித தலங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு நேரடி இரவு நேர ரயில் வசதி இல்லை. இதனால், அவர்கள் திருவனந்தபுரத்திற்கு பேருந்து மூலம் சென்று அங்கிருந்து ரயில் பயணம் செய்ய வேண்டியுள்ளது, இது நேரமும் செலவும் அதிகரிக்கச் செய்கிறது.
ஏரநாடு எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்துடன் நிறுத்தம்
நாகர்கோவிலிருந்து மங்களுர்க்கு தினசரி பகல் நேரத்தில் பயணிக்கும் விதத்தில் தினசரி ரயில் ஏரநாடு ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த ரயில் நள்ளிரவில் நாகர்கோவிலில் வந்து நள்ளிரவே நாகர்கோவிலிருந்து இருந்து புறப்படுவதால், கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படவில்லை. இதனால், இந்த ரயிலில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவும் இருந்து இயங்கி வந்தது.
ஆனால் ரயில்வேதுறை இந்த ஏரநாடு ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்திவிட்டது. இவ்வாறு நிறுத்தப்பட்டதற்கு பதிலாக இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கி இருக்கலாம். அல்லது இதற்கு மாற்று ஏற்பாடாக திருவனந்தபுரத்திலிருந்து மங்களுர்க்கு இயக்கப்படும் மூன்று இரவு நேர ரயில்களில் ஏதேனும் ஒரு ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்கியிருக்கலாம். ஆனால் ரயில்வேதுறை இதுபோன்ற பயணிகள் நலன் பயக்கும் எந்த ஒரு செயலையும் செய்யவில்லை.
கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள்: கன்னியாகுமரி மாவட்ட பயணிகளின் முக்கிய கோரிக்கை, 16347/16348 திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில் வரை நீட்டிப்பு ஆகும். இந்த ரயிலின் காலி பெட்டிகள் காலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்பும் செய்யப்படுகிறது. இவ்வாறு பராமரிப்பு செய்யும் இந்த ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து நாகர்கோவில் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிட்லைன்களில் வைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியும்.
திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருக்கு தற்போது மூன்று தினசரி இரவு நேர ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு ரயிலை அதாவது (16347/16348) திருவனந்தபுரம் - மங்களூர் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பது கேரள பயணிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, ஏனென்றால் தற்போது கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் திருவனந்தபுரத்துக்கு சென்றுவிட்டு இங்கிருந்து இயக்கப்படும் ஒரு ரயிலில்தான் பயணம் செய்கிறார்கள். தற்போது இந்த மூன்று ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை கன்னியாகுமரி மாவட்ட பயணிகளின் எண்ணிக்கையும் அடங்கும் ஆகும்.
முன்னாள் எம்.பி. டென்னிஸின் கோரிக்கை: 1989-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட் விவாதத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ், கன்னியாகுமரியில் இருந்து மங்களூருக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்று முதன் முதலில் கோரிக்கை வைத்தார். ஆனால், 35 ஆண்டுகளாக இந்த கோரிக்கை நிறைவேறவில்லை. முன்னர், 16347/16348 ரயில் கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்பட்டதாகவும், பின்னர் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் அதை திருவனந்தபுரத்திற்கு மாற்றியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மாற்று வசதியாக எந்த ரயிலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் நீண்ட கால கோரிக்கையான மங்களூருக்கு தினசரி இரவு நேர ரயில் வசதியை வழங்குவது, பயணிகள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் பயணத்தை எளிதாக்கும். திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் (16347/16348) ரயிலை நீட்டிப்பது இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வாக அமையும். இந்த திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் (16347/16348) ரயிலை கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். இது கன்னியாகுமரி மாவட்ட பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அம்மன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம் : திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 8:23:01 PM (IST)

கதர் அங்காடிகளில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:09:57 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர்... முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 4:21:24 PM (IST)

மத்திய அரசு நிதி விடுவிப்பு: ஆர்டிஇ திட்டத்தில் நடைமுறைகள் தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 2, அக்டோபர் 2025 4:06:42 PM (IST)

கடலில் மூழ்கி தந்தை, 2 மகள்கள் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:50:14 PM (IST)

கொள்கை எதிரி: விஜய் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன் கேள்வி!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:44:04 PM (IST)
