» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாலத்தீவு கடலில் தவறி விழுந்த தூத்துக்குடி கேங்மேன் உடல் மீட்பு!

வெள்ளி 26, செப்டம்பர் 2025 10:36:07 AM (IST)

மாலத்தீவு அருகே கடந்த 5 நாட்களுக்கு தோணியில் இருந்து கடலில் தவறி விழுந்த தூத்துக்குடியைச் சேர்ந்த கேங்மேன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி ஜாா்ஜ் ரோடு, காந்தி நகா் மீனவா் காலனியைச் சோ்ந்த அண்டோ மகன் ஜெகதீஷ் (40) தோணியில் கேங்மேனாக வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவா், செப். 19ஆம் தேதி இரவு தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து மாலத்தீவிற்கு, உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற தோணியில் 12 பேருடன் சென்றுள்ளாா்.

இந்நிலையில் செப். 22ஆம் தேதி அதிகாலை மாலத்தீவு துறைமுகத்தில் நுழைய அனுமதிக்காக நிறுத்தப்பட்டிருந்த, தோணியிலிருந்து ஜெகதீஷ் தவறி கடலுக்குள் விழுந்துவிட்டாராம். இதுகுறித்து தகவலின் பேரில் மாலத்தீவு காவல் துறையினா், கடலோர காவல் படையினா் ஜெகதீஷை தேடி வந்தனர். 

தூத்துக்குடி மரைன் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெகதீஷ் உடல் கடலில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாலத்தீவு கடலோர காவல் படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு தூத்துக்குடிக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory