» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவெகவினர் திட்டமிட்டு தமிழ்நாடு அரசு மீது தாக்குதலை தொடுக்கிறார்கள்: வைகோ

செவ்வாய் 30, செப்டம்பர் 2025 4:28:07 PM (IST)

கரூர் சம்பவத்தில் தவெகவினர் திட்டமிட்டு தமிழ்நாடு அரசு மீது தாக்குதலை தொடுக்கிறார்கள். முதல்-அமைச்சர் மின்னல் வேகத்தில் செயல்பட்டார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். 

சென்னையில் அவர் அளித்த பேட்டியில், ""விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசல் விவகாரத்தில் முதலமைச்சர் மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளார். இதில் சதி வேலை நடந்ததற்கான ஆதாரம் இல்லை. துயர நிகழ்வில் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் திமுக அரசையும், முதலமைச்சரையும் பொறுப்பாக்க முயல்கின்றனர். தவெகவினரின் குற்றச்சாட்டுகள் தவறாவவை.

தவெகவினர் திட்டமிட்டு தமிழ்நாடு அரசு மீது தாக்குதலை தொடுக்கிறார்கள். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சிபிஐ வந்தால் மட்டும் நடுநிலையான தீர்ப்பை கொடுத்து விடுவார்களா? எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory