» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விதிகளை மீறி வசிப்பவர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும்: வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு

செவ்வாய் 30, செப்டம்பர் 2025 5:31:47 PM (IST)

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் திருநெல்வேலி கோட்டத்தில் வாரிய விதிமுறைகளை மீறி வாடகைக்கும் மற்றும் விலைக்கு வாங்கி வசித்து வரும் குடியிருப்புகள் வருகின்ற அக்.10க்குள் குடியிருப்புகளை காலிசெய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திருநெல்வேலி கோட்டத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட ராஜீவ் வீட்டு வசதி திட்டம் (வ.உ.சி நகர் திட்டப்பகுதி 432 அடுக்குமாடி குடியிருப்பு) (ராஜீவ்காந்தி நகர் 444 திருநெல்வேலி, ராஜீவ் வீட்டு வசதி திட்டம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி, தூத்துக்குடி) திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட வாகைக்குளம் பகுதி-1, பகுதி-2 (480 குடியிருப்புகள்), 

ரெட்டியார்பட்டி பகுதி-1 (480 குடியிருப்புகள்), ரெட்டியார்பட்டி பகுதி-2 (768 குடியிருப்புகள்) மற்றும் ஜெபா கார்டன் பகுதியில் 320 அடுக்குமாடி குடியிருப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் ஆலந்தழை பகுதி 512 அடுக்குமாடி குடியிருப்புகள், கோவில்பட்டி தமிழ்நாடு நிலவங்கி பகுதி 212 அடுக்குமாடி குடியிருப்புகளில் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது சில திட்டப்பகுதிகளில் கிரயப்பத்திரம் வழங்கும் பணியானது துவக்கப்பட்டுள்ளது. தற்போது வாரிய அலுவலர்கள் ஆய்வின்போது வாரிய குடியிருப்புகளை விலைக்கு வாங்கி வசித்து வருவதும், சில குடியிருப்புகளில் வாடகைதாரர்கள் வசித்து வருவது தெரியவந்துள்ளது.

வாரிய விதிமுறைகளை மீறி வாடகைக்கும் மற்றும் விலைக்கு வாங்கி வசித்து வரும் குடியிருப்புகள் வருகின்ற 10.10.2025-க்குள் குடியிருப்புகளை காலிசெய்ய வேண்டும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தினங்களுக்கு மேல் திட்டப்பகுதிகளில் வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நேரடி ஆய்வு மேற்கொள்ளும் போது வாரியத்தின் ஒதுக்கீடு விதிமுறைகளை மீறிய பயனாளிகளின் குடியிருப்புகள் வாரியத்தின் வாயிலாக வழங்கப்படும் கிரயப்பத்திரங்கள் நிறுத்தப்பட்டு குடியிருப்புகள் வாரிய வசமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது இவ்வாறு திருநெல்வேலி கோட்டம் நிர்வாகப் பொறியாளர் மாடசாமி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory