» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காட்டுப் பன்றிகளை அழிக்க மத்திய அரசு உரிமை வழங்க வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்!
புதன் 1, அக்டோபர் 2025 8:24:49 AM (IST)
காட்டுப் பன்றிகளை அழிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்க வேண்டும் என்று மதிமுக துணைப் பொதுச்செயலர் துரை வைகோ எம்.பி. கூறினார்.

எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் சிறை தண்டனைகளுக்கு உள்ளாகின்றனர். இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூரில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தில் யார் மீதும் குற்றம் சுமத்த நான் தயாராக இல்லை.
காட்டுப் பன்றிகளால் இங்குள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவது குறித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். காட்டுப் பன்றிகளை விவசாயிகளே அழிப்பதற்கு அனுமதிக்க வேண்டுமெனில், தேசிய வனவிலங்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும். எனவே, தேசிய வனவிலங்கு சட்டத்தில் திருத்தம் செய்து, காட்டுப் பன்றிகளை அழிக்க விவசாயிகளுக்கும், அந்தந்த மாநில அரசுகளுக்கும் அதிகாரம் கொடுத்தால்தான், இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ட்ரோன் கேமரா மூலம் நகர் பகுதிகள் கண்காணிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 11:00:17 AM (IST)

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)

கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபர்: ஓடும் ரயிலில் பரபரப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:29:36 AM (IST)

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை தொடங்கியது!
சனி 18, அக்டோபர் 2025 11:54:51 AM (IST)
