» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி சின்னத்துரை அன் கோ ஜவுளிக்கடையில் குலசை தசரா பக்தர்கள் பரவசம்!

புதன் 1, அக்டோபர் 2025 12:23:17 PM (IST)



தூத்துக்குடி சின்னத்துரை அன் கோ ஜவுளிக்கடை வளாகத்தில் குலசை தசரா பக்தர்கள் குழுவினர் ஆடி பாடி வாடிக்கையாளர்கள், பக்தர்களை பரசவப்படுத்தினர். 

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்து இங்குதான் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா கடந்த 23‍ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 

தசரா திருவிழாவை முன்னிட்டு காப்புக்கட்டிய தசரா குழுவினர் காளி, முருகன், சிவன், குறவன்-குறத்தி உள்பட பல்வேறு வேடமணிந்து ஊர் ஊராக காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். மேளம், டிரம் செட், செண்டா மேளம், கரகாட்டம், போன்ற கலை நிகழ்ச்சிகளை கோலாகலமாக நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், தூத்துக்குடி தமிழ் சாலையில் இயங்கி வரும் சின்னத்துரை அன் கோ ஜவுளிக்கடையில் காளி, பெருமாள், சிவன், பார்வதி, முருகன் போன்ற வேடமணிந்த குலசை தசரா பக்தர்கள் குழுவினர் சுமார் 1 மணி நேரம் ஆடி பாடினர். இதனை ஏராளமான பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் கண்டு ரசித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory