» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி-சென்னை கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!

புதன் 1, அக்டோபர் 2025 5:47:27 PM (IST)

தூத்துக்குடி-சென்னை இடையே வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்  கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து ரயில்வே கோட்ட மேலாளருக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி -சென்னை சென்னை- தூத்துக்குடி இடையே ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கியமைக்கு எங்கள் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் வருகின்ற அக்டோபர் 4, 5 நாட்களில் தூத்துக்குடி சென்னை முத்து நகர் ரயிலில் 4ம் தேதி சனிக்கிழமை காத்திருப்பு பட்டியல் அனைத்து வகுப்பிலும் சுமார் 300க்கு மேல் காணப்படுகிறது. 

அக்.5 ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் வெயிட்டிங் லிஸ்ட் தற்போதைய 400க்கு மேல் உள்ளது. மேலும் இந்த நாட்களில் தட்கல் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் அதிகமாக காணப்படும் சூழ்நிலை தான் இருக்கிறது. தசரா பண்டிகை காரணமாக  சாதாரண பயணிகள் பெட்டிகளில் கூட்டமும் அதிகமாக நிரம்பி வழியும் சூழ்நிலைதான் உள்ளது.  ஆதலால், தங்கள் நிர்வாகம் தயவு கூர்ந்து தூத்துக்குடி-சென்னை இடையே வரும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில்  கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். நன்றி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory