» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குலசை தசரா திருவிழாவில் 4ஆயிரம் போலீசார் பாதுகாப்பு: நெல்லை சரக டி.ஐ.ஜி ஆலோசனை!

வியாழன் 2, அக்டோபர் 2025 10:32:23 AM (IST)



குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் (பொறுப்பு)  சந்தோஷ் ஹடிமணி  தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23.09.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 02.10.2025 அன்று சூரசம்காரம் மற்றும் 03.10.2025 அன்று காப்பு தரித்தல் நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது.

இத்திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய நாட்களான 02.10.2025 மற்றும் 03.10.2025 ஆகிய 2 நாட்கள் திருவிழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குலசேகரன்பட்டினம் அன்னம் மஹாலில் வைத்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் (பொறுப்பு)  சந்தோஷ் ஹடிமணி  தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 
இக்கூட்டத்தில் தசரா திருவிழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுரைகள் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. 

தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட தென்காசி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் மற்றும் மதுரை மாநகரத்தைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள்/காவல் துணை ஆணையர் தலைமையில் 10 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 46 காவல் உதவி/ துணை கண்காணிப்பாளர்கள், 117 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory