» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி சம்பவத்தின் போது பா.ஜ.க. குழு எங்கு சென்றது? சீமான் கேள்வி
வெள்ளி 3, அக்டோபர் 2025 3:39:25 PM (IST)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழு எங்கே சென்றிருந்தது? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
_1759486163.jpg)
தூத்துக்குடியில் தனியார் ஹோட்டலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக உரையாடி உறவை வளர்ப்போம் எனும் கருத்தரங்கம்நடைபெற்றது. இதில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி சம்பவத்தின் போது பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழு எங்கே சென்றிருந்தது? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்றார் எடப்பாடி பழனிசாமி.
தேர்தல் வருவதால் பா.ஜ.க. எம்.பி.க்கள் குழு கரூர் வந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மக்கள் புரட்சி. கரூரில் 41 பேர் மரணத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய்யே முதல் காரணம்.
காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தே பேச்சை தொடங்கினார் விஜய். 41 பேர் மரணத்திற்கு விஜய் எந்த பொறுப்பையும் ஏற்கவில்லையே. இஸ்லாமியர், கிறிஸ்தவர் வாக்குகளை இந்த முறை எளிதில் எடுத்துச் சென்றுவிட முடியாது. எங்களுக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு அளியுங்கள் என்று மக்களிடம் கேட்கிறோம். எங்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்: தமிழக முதல்வருக்கு சத்யராஜ் நன்றி!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:55:14 PM (IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:36:55 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

விஜய் உடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு: ஜனவரியில் கூட்டணி குறித்து உடன்பாடு?
வியாழன் 9, அக்டோபர் 2025 4:44:38 PM (IST)

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? அண்ணாமலை கிண்டல்!!
வியாழன் 9, அக்டோபர் 2025 4:23:05 PM (IST)

கோவையில் ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்ட புதிய மேம்பாலம் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 9, அக்டோபர் 2025 3:54:49 PM (IST)
