» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில்பட்டியில் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் நின்று செல்லும்!
வெள்ளி 3, அக்டோபர் 2025 4:48:08 PM (IST)
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் தினமும் சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.05 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.50 மணிக்கு நெல்லை சந்திப்பை அடைகிறது. மறுபுறம், நெல்லையிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அன்று இரவு 10.40 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். தற்போது இந்த ரயில் 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், சோதனை அடிப்படையில் சென்னை எழும்பூர் - நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று மத்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்: தமிழக முதல்வருக்கு சத்யராஜ் நன்றி!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:55:14 PM (IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:36:55 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

விஜய் உடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு: ஜனவரியில் கூட்டணி குறித்து உடன்பாடு?
வியாழன் 9, அக்டோபர் 2025 4:44:38 PM (IST)

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? அண்ணாமலை கிண்டல்!!
வியாழன் 9, அக்டோபர் 2025 4:23:05 PM (IST)

கோவையில் ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்ட புதிய மேம்பாலம் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 9, அக்டோபர் 2025 3:54:49 PM (IST)
