» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையில் போதை பார்ட்டி: 3 பெண்கள் உள்பட 18 பேர் கைது
செவ்வாய் 7, அக்டோபர் 2025 12:51:06 PM (IST)
சென்னையில் பப் ஒன்றில் நடந்த பார்ட்டியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள், கஞ்சா பயன்படுத்திய 3 பெண்கள் உட்பட 18பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் ஈவிஆர் சாலையில் உள்ள பப் ஒன்றில் கஞ்சா பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஓட்டல் அறைகளில் சோதனையிட்டனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லை. அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பது தெரியவந்தது.
இதன்பின்னர் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த 3 பெண்கள் உள்பட மொத்தம் 18 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் இவர்கள் தான் அந்த பார்ட்டியில் பங்கேற்றதும், மெத்தபெட்டமைன் போதைப்பொருள், கஞ்சா பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 18 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களது 3 கார்கள், 2 பைக்குகள், 18 செல்போன்கள் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றம் அவர்கள் 18 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவிற்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 9:36:55 PM (IST)

கொலை வழக்கில் தந்தை - மகனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 8:00:18 PM (IST)

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம்: வேல்முருகன் எச்சரிக்கை
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:51:15 PM (IST)

தீபாவளி சிறப்பு ரயில்களில் டிக்கெட் விற்று தீர்ந்தது: ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:29:48 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:05:39 PM (IST)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 நேரடி சேர்க்கை: அக்.17 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:03:48 PM (IST)
