» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீபாவளியை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

புதன் 15, அக்டோபர் 2025 3:27:24 PM (IST)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே கூடுதலாக சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க பின்வரும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்:-

சென்னை சென்ட்ரல் - போத்தனூர்

(வண்டி எண்: 06049/06050): சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரவு 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் போத்தனூரில் இருந்து அக்டோபர் 18-ம் தேதி மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரவு 11.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

மேலும், போத்தனூரில் இருந்து (வண்டி எண்: 06100 ) அக்டோபர் 21-ம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை வந்தடையும்.

தாம்பரம் - கன்னியாகுமரி:

(வண்டி எண்: 06133): தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் 1.25 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்றடையும்.

கன்னியாகுமரி-செங்கல்பட்டு 

(வண்டி எண்: 06134): கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 17-ம் தேதி மதியம் 3.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு வந்துசேரும்.இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மதியம் 2.15 முதல் தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory