» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு

ஞாயிறு 19, அக்டோபர் 2025 1:14:38 PM (IST)

நீதிமன்ற உத்தரவின் பேரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியொன்றில், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் புகார் தொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் அலெக்சாண்டர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரரின் புகார் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory