» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொட்டலூரணி மக்களை விடுதலை செய்ய வேண்டும்: சுப. உதயகுமாரன் வலியுறுத்தல்

வியாழன் 23, அக்டோபர் 2025 11:53:33 AM (IST)

பொட்டலூரணியில் அறவழியில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பச்சைத் தமிழகம் தலைமைப் பணியாளர் சுப. உதயகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தங்களுடைய வாழ்வுரிமைகளை, வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐநூறு நாட்களைத் தாண்டி அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி மக்களைக் கைது செய்து, அவர்களின் தலைவர் தோழர் சங்கரநாராயணன் அவர்களைத் தனியாக அடைத்து வைத்திருக்கும் காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

போராடும் மக்களின் முக்கியமானக் கோரிக்கையான தனியார் மீன் அரவை ஆலைகளை உடனடியாக மூட வேண்டும். சாலைப் போக்குவரத்து தொடர்பான அவர்களின் கிலேசங்கள் தீர்க்கப்பட வேண்டும். அமைதியாக அறவழியில் போராடும் மக்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெறப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory