» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் உலக நன்மைக்காக சிறப்பு துவா : திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

சனி 25, அக்டோபர் 2025 4:56:22 PM (IST)



தூத்துக்குடி அரபிக் கல்லூரியில் உலக நன்மையும் அமைதியும் வேண்டி 60 கோடி ஸலவாத்துகள் கூறி சிறப்பு துவா நடைபெற்றது. 

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் செயல்பட்டு வரும் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி சார்பில் மிலாது நபி விழா மற்றும் வலிமார்கள் நினைவு விழா மற்றும் உலக நன்மையும் அமைதியும் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி 60 கோடி ஸலவாத்துகள் ஓதி சிறப்பு துவா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ் தலைமை தாங்கினார். 

கல்லூரி துணை முதல்வர் அஸ்ரார் அகமது வரவேற்றுப் பேசினார். இதில் அரசு காஜி முஜிபுர் ரஹ்மான், ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அழிம், இமாம் சதக்கத்துல்லா, பேராசிரியர்கள் முகமது இஸ்மாயில், செய்யது அப்பாஸ், தாஜீத்தீன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இது தொடர்ந்து சிறப்பாக சேவை செய்த இமாம்கள் சமூக ஆர்வலர்களுக்கு ஜாமியா பள்ளிவாசல் முன்னாள் தலைவர் மீராசா அரபிக் கல்லூரி செயலாளர் அபூபக்கர் பொருளாளர் சுலைமான் உள்ளிட்டோர் சால்வை வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் சிந்தாமணிபட்டி சவுதியா கல்வி குழுமம் தாளாளர் சிராஜுதீன் அகமது ரஷாதி மற்றும் அரபிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மௌலவிகள் ஆகியோர் சிறப்பு துவா ஓதினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணைத் தலைவர் எம் எஸ் எப் ரகுமான், முன்னாள் செயலாளர் சிராஜுதீன், முன்னாள் பொருளாளர் மூஸா, உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர் முடிவில் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி தலைவர் சகாப்தின் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory