» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேவர் குருபூஜை பாதுகாப்புக்கு வந்த பெண் தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!
புதன் 29, அக்டோபர் 2025 12:03:00 PM (IST)
பசும்பொன் தேவர் குருபூஜை பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த பெண் காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் வரும் 30 தேதி முத்துராமலிங்கத் தேவரின் 63வது குருபூஜை மற்றும் 118வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு 8000 போலீசார் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தலைமை காவலர் கலைவாணி (41) என்பவர் வந்துள்ளார். இவர் நேற்று இரவு 12 மணியளவில் கமுதியில் உள்ள தனியார் பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இருமல் தொடர்ச்சியாக ஏற்பட ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த கலைவாணியின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
புதன் 29, அக்டோபர் 2025 4:56:43 PM (IST)

உயர்கல்வி சேர்க்கை விகிதம் 96.15% ஆக உயர்வு : கனிமொழி எம்பி வாழ்த்து!
புதன் 29, அக்டோபர் 2025 4:20:54 PM (IST)

திமுக ஆட்சியில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று பணி நியமனம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
புதன் 29, அக்டோபர் 2025 4:09:37 PM (IST)

தவெக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: இபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு!
புதன் 29, அக்டோபர் 2025 4:00:39 PM (IST)

தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
புதன் 29, அக்டோபர் 2025 3:49:23 PM (IST)

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் கள்ளச் சந்தையில் பாஸ் விற்பனை? காவல்துறை விளக்கம்
புதன் 29, அக்டோபர் 2025 3:09:21 PM (IST)




