» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்!

செவ்வாய் 4, நவம்பர் 2025 12:34:39 PM (IST)



அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மனோஜ் பாண்டியன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். 

எம்ஜிஆர் காலத்து அரசியல் தலைவர்களில் ஒருவரான முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன். 1993ஆ, ஆண்டு முதல் மனோஜ் பாண்டியன் அதிமுகவில் பயணித்து வருகிறார். அதிமுகவின் மாநில வழக்கறிஞர் அணி இணை செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தார்.

இதன்பின் ஒபிஎஸ் ஆதரவாளராக இருந்த மனோஜ் பாண்டியன், கடந்த சில ஆண்டுகளாக எந்த அணியிலும் இணையாமல் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக மனோஜ் பாண்டியன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ-வாக இருக்கும் மனோஜ் பாண்டியன், தனது பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மனோஜ் பாண்டியன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து மனோஜ் பாண்டியன் பேசுகையில், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஒருநாளும் அதிமுகவை யாரிடமும் அடகு வைக்கவில்லை. அதிமுக அந்தக் காலத்தை போல் இல்லை.

இன்றைய அதிமுக என்பது வேறு ஒரு இயக்கத்தை நம்பி அந்த இயக்கத்தின் சொல்படி நடக்கக் கூடிய ஒரு நிலை உள்ளது. எம்ஜிஆர் கொள்கையை காற்றில் பறக்கவிட்டுவிட்டு பாஜகவின் கிளைக் கழகமாக செயல்படும் நிலையில் உள்ளது. இயக்கத்திற்கு உழைக்கக் கூடிய உழைப்பை வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி துரத்துகிறார்.. அவரின் நோக்கம், சிந்தனை, நடைமுறை என்ன என்பதை உணர்ந்து, திமுகவில் இணைந்துள்ளேன்.

தொண்டர், மக்களின் உணர்வை எந்த சூழலிலும் ஏற்க மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இன்று மாலை 4 மணிக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அதிமுகவை அடகு வைத்து அங்கிருப்பவர்களோடு இருப்பதை விட, திராவிட கொள்கைகளை பாதுகாக்கக் கூடிய தலைவரோடு தொண்டனாக பணியாற்ற வந்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory