» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இளைஞரை திருமணம் செய்து ஏமாற்றி ரூ. 12 லட்சம் மோசடி: இளம்பெண் மீது வழக்குப் பதிவு
புதன் 5, நவம்பர் 2025 5:38:12 PM (IST)
புதுக்கடை அருகே திருமணம் செய்து இளைஞரை ஏமாற்றி ரூ. 12 லட்சம் மோசடி செய்ததாக இளம்பெண் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே ராமன்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜின் (35). இவரும், முள்ளூர்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த கேத்தரின் பிளஸ்சியும் (23) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். கடந்த 2023 இல் இரு வீட்டாருக்கும் தெரியாமல் ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர், சுஜின் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். கேத்தரின் பிளஸ்சி பெங்களுரில் படிக்கச் சென்றார்.
இந்த நிலையில், கேத்தரின் பிளஸ்சி தனது அக்காவுக்கு திருமணம் முடிந்தால்தான் வீட்டில் எனது திருமணத்தைப் பற்றி பெற்றோரிடம் பேச முடியும். எனவே, அக்கா திருமணத்துக்கு பணம் தேவை எனக் கூறி சுஜினிடமிருந்து ரூ.12 லட்சம் பெற்றார். சிறிது நாள்களுக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து திரும்பிய சுஜின் இருவரும் சேர்ந்து வாழ பிளஸ்சியை அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார்.
தான் ஏமாற்றப்பட்டத்தை அறிந்த சுஜின், புதுக்கடை காவல் நிலையத்தில், தன்னை ஏமாற்றி ரூ. 12 லட்சம் மோசடி செய்ததாக பிளஸ்சி மீது அண்மையில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதியவில்லை. இதையடுத்து அவர், குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் புதுக்கடை போலீசார் கேத்தரின் பிளஸ்சி மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: தலைமை டி.ஜி.பி.யை நியமிக்க இபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 10, நவம்பர் 2025 8:27:41 AM (IST)

உண்டியலை உடைத்தபோது கருவறையில் இருந்து சத்தம் கேட்டதால் கொள்ளையன் ஓட்டம்!!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:30:20 AM (IST)

கட்சி தொடங்கியவுடன் முதல்-அமைச்சர் ஆகவில்லை: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:28:06 AM (IST)

மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:20:41 AM (IST)

மோசடி வழக்கில் சிறிய தொகைக்காக வங்கிக்கணக்கை ஒட்டுமொத்தமாக முடக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:18:45 AM (IST)

தமிழகத்தில் தூத்துக்குடி உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
சனி 8, நவம்பர் 2025 12:45:48 PM (IST)




