» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தலைமுடி உதிர்வால் மன வேதனை: இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை!

புதன் 19, நவம்பர் 2025 5:36:37 PM (IST)

தென் தாமரைக்குளத்தில் தலைமுடி உதிர்வால் மன வேதனையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைக்குளம் கீழச்சாலை பகுதியில் வசித்து வந்த தங்கச்சாமி அவர்களின் இரண்டாவது மகள் ஐஸ்வர்யா (27), பிஎஸ்சி பட்டதாரி. கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமுடி அதிகமாக உதிர்ந்து வந்ததால் இவர் தீவிரமான மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தான் உயிரோடு இருப்பதை விட சாவது மேல் என்று அடிக்கடி மன வேதனையை வெளிப்படுத்தி வந்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், ஐஸ்வர்யா மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தென் தாமரைக்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory