» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: போலி தீவிரவாதிகள் பிடிபட்டனர்!
வியாழன் 20, நவம்பர் 2025 11:29:38 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியது. தீவிரவாதிகள் போல வந்த 13 பேர் பிடிபட்டனர்.
தமிழ்நாட்டில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 8:00 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி ராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பேக்டர் பேச்சிமுத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை பணியில் ஈடுபட்டனர். இதில் மீன்பிடி துறைமுகம், திரேஸ்புரம், பழைய துறைமுகம் பகுதிகளில் தீவிரவாதிகள் போல் ஊடுருவிய 13பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 2 போலி வெடிகுண்டுகள் உட்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு படையினர், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர், சுங்க இலாகாவினர், மீன்வளத் துறையினர், கியூ பிரிவு போலீசார், சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடல் பகுதியில் கடற்படை கப்பல், கடலோர பாதுகாப்பு படை கப்பல், ரோந்து படகு மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சேலத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி விஜய் பிரசாரம்: காவல்துறை அனுமதி அளிப்பதில் சிக்கல்?
வெள்ளி 21, நவம்பர் 2025 8:13:03 AM (IST)

நாகர்கோவிலில் குண்டும், குழியுமான சாலைகள் : பள்ளி மாணவ மாணவிகள் வாகன ஓட்டிகள் அவதி
வியாழன் 20, நவம்பர் 2025 5:41:18 PM (IST)

டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும்: தளவாய் சுந்தரம் ஆவேசப் பேச்சு!
வியாழன் 20, நவம்பர் 2025 5:32:57 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரியில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வியாழன் 20, நவம்பர் 2025 5:10:10 PM (IST)

தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 20, நவம்பர் 2025 5:00:12 PM (IST)

பார்சல்களை அனுப்ப தனி ரயில் சேவை : டிச.12-ம் தேதி முதல் தொடக்கம்
வியாழன் 20, நவம்பர் 2025 12:10:02 PM (IST)




