» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெகவில் இணைய முடிவு? எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்!
புதன் 26, நவம்பர் 2025 12:17:08 PM (IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று (நவ. 26) ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த ஆலங்குளம் தொகுதி மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த நிலையில், கோபிசெட்டிப்பாளையத்தின் எம்.எல்.ஏ., பதவியை செங்கோட்டையனும் ராஜினாமா செய்துள்ளார். இதனால் சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 63ஆக குறைந்துள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே தொகுதியில் அதிகம் முறை (8 முறை வென்றார்) போட்டியிட்டு வென்றவர் என்ற பெருமைக்கு உரியவரான செங்கோட்டையன், கொங்கு மண்டலத்தின் வாக்குகளைக் கவருவதில் முக்கிய நபராக அறியப்பட்டு வருகிறார்.
ஓபிஎஸ் - இபிஎஸ் பிரிந்துள்ள நிலையில், கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேசியதால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கியிருந்தார்.இதனால், அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகத் தெரிகிறது. சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கு முன்பு, தவெகவில் இணையப்போகிறீர்களா? என செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ''ஒரு நாள் பொறுத்திருங்கள்'' என அவர் பதில் அளித்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளதால், இனி அவர் எந்தக் கட்சியிலும் இணையலாம். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, பதவியில் இருக்கும்போது வேறு ஒரு கட்சியில் இணையக்கூடாது என்பதால், செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் செங்கோட்டையன் வேறு கட்சியில் இணையவுள்ளது உறுதியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிகளில் திமுகவினரின் தில்லுமுல்லுகளை தடுத்து நிறுத்துங்கள்: இபிஎஸ் அறிவுறுத்தல்
புதன் 26, நவம்பர் 2025 5:17:20 PM (IST)

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசில் கட்சியை இணைத்தார் தமிழருவி மணியன்!
புதன் 26, நவம்பர் 2025 4:28:11 PM (IST)

மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
புதன் 26, நவம்பர் 2025 4:12:54 PM (IST)

குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று : 700 விசைப்படகுகள் கரைதிரும்பின
புதன் 26, நவம்பர் 2025 3:35:40 PM (IST)

புதுவையில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ : காவல்துறையிடம் அனுமதி கோரி மனு!
புதன் 26, நவம்பர் 2025 11:28:57 AM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு இளஞ்சிறார்கள் உட்பட 5பேர் கைது: 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
புதன் 26, நவம்பர் 2025 11:08:54 AM (IST)




