» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா தேர் பவனி : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

புதன் 3, டிசம்பர் 2025 10:18:13 AM (IST)



நாகர்கோவில் அருகே கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவில் தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தின் திருவிழா நவ.23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேள தாளங்கள் முழங்க கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அமைதி புறாக்கள் பறக்க விடப்பட்டன. கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் முதல் நாள் திருப்பலி நடைபெற்றது. 

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று டிசம்பர் 3 தேர் பவனி நடைபெற்றது. தேர்பவனியில் பக்தர்களின் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிகழ்சியில் குமரி மாவட்டம் மட்டுமல்ல நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சென்னை மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். தேர் பவனியை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory