» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி புதிய பேராயராக கிறிஸ்டோபர் விஜயன் தேர்வு: நாளை பதவியேற்பு விழா

சனி 6, டிசம்பர் 2025 3:51:18 PM (IST)



கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் புதிய பேராயராக கிறிஸ்டோபர் விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் பிரதம பேராயர் ரூபன் மார்க் தலைமையில் அருட்பொழிவு அபிஷேகம் செய்கிறார். 

சி.எஸ்.ஐ. கன்னியாகுமரி திருமண்டலத்தின் பேராயர் செல்லையா ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து 7வது பேராயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 25ந் தேதி நடைபெற்றது. இதில் நெய்பூர் சேகர ஆயர் கிறிஸ்டோபர் விஜயன், மார்த்தாண்டம் சேகரம் காரவிளைஆயர் பிரேம் செல்வசிங், நெய்யூர் சேகரம் செம்பொன்விளை ஆயர் ராஜா ஜெயசிங், முட்டம் இறையியல் கல்லூரி தாளாளர் இராயப்பன் ஐசக் ஆகிய நால்வர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நால்வரிலிருந்துபுதிய பேராயராக கிறிஸ்டோபர் விஜயன் சி.எஸ்.ஐ. சினாடு பேரவை தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை சினாடு பேரவை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து புதிய பேராயருக்கான பதவியேற்பு விழா நாளை டிசம்பர் 7 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நாகர்கோவில் சி.எஸ்.ஐ. கஸ்பா ஆலயத்தில் வைத்து நடைபெற்றுகிறது.

அருட்பொழிவு ஆராதனையில் புதிய பேராயராக தேர்வு செய்யப்பட்ட ஆயர் கிறிஸ்டோபர் விஜயனுக்கு சி.எஸ்.ஐ. பிரதம பேராயர் ரூபன் மார்க் அருட்பொழிவு அபிஷேகம் செய்கிறார். இதில் சி.எஸ்.ஐ. பொதுச் செயலாளர் பெர்னாண்டஸ் ரத்தினராஜா, பொருளாளர் விமல் சுகுமார், மற்றும் பேராயர்கள், திருமண்டல ஆயர்கள் மற்றும் திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்‌.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory