» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
சனி 13, டிசம்பர் 2025 8:46:31 AM (IST)
அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை வரும் டிச.17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு கடந்த 2006 இல் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நீதிமன்றத்தில் அமைச்சர் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றபோது, அமைச்சரின் மனைவி, சகோதரர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை.
அமைச்சரின் மூன்று மகன்களில் ஒருவரான அனந்த மகேஸ்வரன் மட்டுமே ஆஜர் ஆனார். இதையடுத்து, வழக்கை விசாரிக்கும் மாவட்ட நீதிபதி வசந்தி, அடுத்தகட்ட விசாரணையை வருகிற டிச. 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)


