» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சினிமா தயாரிப்பாளரை மிரட்டியதாக வழக்கு: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது!

சனி 13, டிசம்பர் 2025 11:36:24 AM (IST)

சென்னையில், சினிமா தயாரிப்பாளரை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர். தனது யூடியூப் பக்கத்தில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துக்களை விவாதித்து வருகிறார். இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்துள்ளனர். 

சவுக்கு சங்கருடன் சேர்த்து அவரது யூடியூப் சேனலில் பணியாற்றும் மேலும் 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதேவேளை, சென்னை மாநகர ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று வெளியிட்டதாலேயே இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory