» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:24:37 PM (IST)

பிட்புல் மற்றும் ராட்வீலர் ரக நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரூ.25.95 கோடி செலவில் சென்னையில் 200 வார்டுகளில் தூய்மை பணியாளர்களுக்கு கழிப்பறையுடன் கூடிய ஓய்வறை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்போர்கள் பிட்புல், ராட்வீலர் வகை நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே, இந்த இரு இன நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த நாய் இனங்கள், உரிமையாளரின் கட்டுப்பாட்டை மீறி ஆக்ரோஷமாக செயல்படுவதாகவும், ரோட்டில் செல்வோரை கடித்துக் குதறுவதாகவும் புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:12:56 PM (IST)

வாக்குறுதியை காப்பாற்றாமல் செவிலியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:54:00 AM (IST)

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 8:29:15 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:53:00 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் நாளை ஹனுமான் ஜெயந்தி விழா
வியாழன் 18, டிசம்பர் 2025 3:42:39 PM (IST)

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா? விஜய்க்கு எதிராக பரபரப்பு போஸ்டர்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:41:34 PM (IST)


