» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீக்குளித்தவரின் குடும்பத்திற்கு தொழிலதிபர் ரூ.10 லட்சம் நிதியுதவி

சனி 20, டிசம்பர் 2025 11:19:51 AM (IST)



திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீக்குளித்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தொழிலதிபர் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். 

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி தனது உயிரை மாய்த்துக் கொண்ட பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு  கரூரைச் சேர்ந்த ஷோபிகா இம்பெக்ஸ்  பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி இந்துமதியிடம் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவசாமி சார்பாக, நிறுவனத்தின் மேலாளர் பழனியப்பன் நேரடியாக வந்து வழங்கி சென்று உள்ளார்

பாஜக நிதியுதவி

இதுபோல், உயிரிழந்த பூர்ணசந்திரனின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக பா.ஜ.க தலைவர், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவியை வழங்கினார். மேலும், பூர்ணசந்திரனின் குடும்பத்திற்கு எந்தச் சூழலிலும் பா.ஜ.க உறுதுணையாக இருக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் உறுதியளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory