» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்படுமா? தேர்வாணையம் விளக்கம்!

வியாழன் 25, டிசம்பர் 2025 4:15:58 PM (IST)

2026ஆம் ஆண்டில் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவல்களை தேர்வாணையம் மறுத்துள்ளது. 

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நிரப்பி வருகிறது. குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சியை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும், அடுத்த நடைபெறும் தேர்வுகள் குறித்த கால அட்டவணை வெளியிடப்படும். 

அந்த வகையில் 2026 க்கான ஆண்டு அட்டவணை டிசம்பர் முதல் வாரத்தில் வெளியானது. இதன்படி, தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வு அடுத்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தேர்வகள் தற்போதே தயாராகி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வந்தது. அதாவது, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி கூறியிருப்பதாவது:- 2026-ல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி I, II, IIA மற்றும் IV பணிகளுக்கான தேர்வுகள், டிசம்பர் 2024-ல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும். பாடத்திட்டம் மீண்டும் மாற்றப்படும் என வலைத்தளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory