» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் பேருந்து நிலைய தபால்நிலையம் ஜனவரி 3ம் தேதி மூடல்!

சனி 27, டிசம்பர் 2025 4:11:51 PM (IST)

நாகர்கோவில் பேருந்து நிலைய தபால் நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலைய தபால் நிலையம் வருகிற ஜனவரி 3ம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்பட்டு மணிமேடை தபால் நிலையத்துடன் இணைக்கப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவரும், நாகர்கோவில் போஸ்டல் போரம் (Postal Forum) உறுப்பினருமான எஸ்.ஆர்.ஸ்ரீராம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது.

இந்திய தபால் தந்தி இலாகாவானது நூற்றாண்டு காலமாக இயங்கி வருகின்றது. சில வருடங்களுக்கு முன்பு வங்கியும், இன்சூரன்ஸ் உட்பட பல திட்டங்கள் துவங்கி ஏழை மக்களுக்கும் நல்ல பலன் கிடைத்து வருகின்றது. கடந்த 100 வருட காலமாக இயங்கி வந்த தபால் இலாகா தற்பொழுது சேவை மனப்பான்மை மாறி வணிக நிறுவனமாக மாறியுள்ளது.

இதன் அடிப்படையில் தற்பொழுது இந்தியா முழுவதும், தமிழ்நாட்டிலும் உள்ள பல தபால் நிலைங்கள் வாடகை அதிகம், குறிப்பாக நாகர்கோவில் நகராட்சியினர் அண்ணா பேருந்து நிலையத்திலுள்ள கட்டிடத்திற்கு வாடகை கூடுதலாக இருப்பதால் அங்கிருந்து (வடிவீஸ்வரம்) தபால் நிலையத்தை மூட நிர்வாகம் முடிவு செய்துள்ளது வருகிற ஜனவரி 2026, 3ம் தேதி முதல் மூட உள்ளார்கள்.

அது மட்டுமள்ள நாகர்கோவில் வடசேரி நாகர்கோவில் பஜார், நாகர்கோவில் மேற்கு நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் மற்றும் மறவன் குடியிருப்பு ஆகிய 5 இடங்களில் தபால் நிலையங்களை மூடி அதன் அடுத்துள்ள தபால் நிலையங்களோடு இணைக்க முடிவு செய்துள்ளதாக அறிகின்றோம்.

இது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபொழுது வருமானம் இல்லாத தபால் நிலயங்கள் மூட இந்திய தபால் நிலைய நிர்வாகம் முடிவு செய்து சில நாட்களில் விரைவில் மூட உள்ளதாக தெரிவித்தனர். இதனால் ஏழை, விவாசய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் ஆதலால் மூடும் திட்டத்தை மத்திய அரசு உடன் கைவிட வேண்டும் தொடர்ந்து செயல்பட அரசு உதவி செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் வலியுறுத்தியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory