» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொதுமக்களின் வரிப்பணத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமா? சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்டனம்

செவ்வாய் 6, ஜனவரி 2026 8:24:19 AM (IST)

தி.மு.க. அரசு 98 சதவீத மக்களுக்கான அரசாக இல்லாமல், 2 சதவீத அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கான அரசாகவே செயல்படுகிறது என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. 

சட்ட பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் ஜெய்கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து கடந்த மார்ச் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ.3 லட்சத்து 86 ஆயிரத்து 797 கோடி கடன் வாங்கி குவித்துள்ளது. 

இதுபோன்ற சூழ்நிலையில், அரசியல் லாபத்திற்காக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது, மாநில நிதி மேலாண்மையையும், சமூக பொருளாதார நீதியையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்த ஓய்வூதிய திட்டத்துக்கு தேவையான ரூ.13 ஆயிரம் கோடியை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். மொத்த மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதம் இருக்கும் அரசு ஊழியர்களுக்காக தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்படுகிறது. 

தி.மு.க. அரசு 98 சதவீத மக்களுக்கான அரசாக இல்லாமல், 2 சதவீத அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கான அரசாகவே செயல்படுகிறது. இதை சட்ட பஞ்சாயத்து இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. உரிய நிதி ஆதாரங்கள் ஏற்படுத்தி அரசு கஜானா வளமான பிறகு இந்த ஓய்வூதியத் திட்டத்தை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory